நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்ரி பீடம் ஆகியவற்றின் ஸ்தாபகரும் , காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தினம் குரு ஜெயந்தி வைபவம் நாளை 26 ஆம் திகதி வியாழக்கிழமை நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் பக்தி பூர்வமாக நடைபெறவுள்ளது.
நாட்டில் சாந்தி சமாதானத்திற்காக மகரிஷிகளை வேண்டி ஆன்மீக உயிர் மூலிகைககளைக் கொண்டு விசேட மகா யாகம் நடாத்தப்படும்.
மேலும் ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயத்தில் காலை 6-30 மணிக்கு விசேட அலங்கார பூஜைகள் நடைபெற்று காலை 9-30 மணிக்கு காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் திருவுருவச்சிலை ஆலயத்திலிருந்து காயத்ரி குரு பீடத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு குரு பூஜை,காயத்ரி பூஜை, மகா யாகம், பிரார்த்தனை, தியானம் மற்றும் பஜனை என்பன நடைபெறும் .
அன்று காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷி அறநெறி பாடசாலை மாணவர்களின் கண்காட்சிகளும் இடம்பெறயிருப்பதோடு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நண் பகல் 12-30 மணிக்கு பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே இப்பூஜைகளில் கலந்துக் கொண்டு மகரிஷிகளினதும் , சற்குரு தேவரினதும் அருளைப் பெற்று பெருவாழ்வு வாழ அனைவரையும் அன்புடன் ஆலய அரங்காவலர் சக்திவேல் சந்திரமோகன் அழைத்துள்ளார்.
நானுஓயா நிருபர்










