“ராஜபக்சக்கள் வேண்டாம் எனக்கோரியே மக்கள் போராட்டம் வெடித்தது. மாறாக போராட்டக்காரர்கள் நாமல் ராஜபக்சவை கோரவில்லை.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ராஜபக்ச குடும்பத்துக்கு இந்நாட்டில் மீண்டும் இடமில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். எனவே, நாமல் ராஜபக்சவால் வெற்றிபெறமுடியாது. 17 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை ஆரம்பமாகும். மக்கள் அணிதிரளும்போது ரணிலுக்கான பலம் தெரியவரும்.
சம்பிக்க ரணவக்க, ஹக்கீம் மற்றும் ரிஷாட் போன்றவர்கள் கடந்தமுறையும் சஜித்துடன் இருந்தனர், ஆனால் சஜித் தோற்றார். இம்முறையும் பிரதமர் பதவியை வழங்குவேன் என ஆசைக்காட்டி சம்பிக்கவின் ஆதரவை பெறுவதற்கு சஜித் முற்படலாம். இவ்வாறு மூவருக்கு பிரதமர் பதவி தொடர்பான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.” – என்றார்.










