காரொன்றும், தனியார் பேருந்தொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில், காரில் பயணித்த சாரதி மற்றும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் ஹட்டனிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து இன்று (23) பிற்பகல் 2 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, குடாகம பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டபோது, கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி அதே திசையில் பின்னால் பயணித்த கார், பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காருக்கும் பேருந்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










