ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து: 10 பேர் காயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேனொன்றும், தனியார் பஸ்சும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

வேனில் பயணித்த இருவரும், பஸ்ஸில் பயணித்த எட்டு பேருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்சும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்து தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles