ஹப்புத்தளை நகரில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது மகனும், 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பக்கம் இருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த லொறியொன்று, வீதியைக் கடக்க முற்பட்ட இருவர்மீதும் மோதியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
விபத்துக்குள்ளானவர்கள் பாலகொல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஹப்புத்தளை பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றிற்கு வந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா