ஹாலிஎல, பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் இன்று (14) காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
51 மற்றும் 70 வயதுகளுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும், 22 மற்றும் 53 வயதுடைய இருவரே பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இன்று காலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது .
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
		
                                    









