ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதிகோரி தொடர்கிறது போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்றும் போராட்டங்கள் இடம்பெற்றன.
 
அந்தவகையில் மலையக மக்களுக்கான காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஹட்டனில் இன்று நடைபெற்றது.
ஹிசாலினியின் மரணத்துக்கு நீதிகோரி பெண்கள் மற்றும் சிறுவர்கள் தலையில் கறுப்பு பட்டியணிந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

‘பெண்களையும் சிறுவர்களையும் விற்று பிழைக்காதே, மனித வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’; தரகர்களை கைது செய்து அன்று உமாதேவி ரீட்டா சுமதி, ஜீவராணி நாளை யார்?’ என போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles