அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருக்கு மீண்டும் பிசிஆர் பரிசோதனை!

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (21.12.2020) மீண்டும் பெறப்பட்டுள்ளன.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதியானது.

இந்நிலையிலேயே அவர் மீண்டும் பி.சி.ஆர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபை மற்றும் தலாவக்கலை – லிந்துலை நகரசபை ஆகியன இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட தவிசாளர் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். அதில் ஆளுங்கட்சி பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அவர் பல இடங்களுக்கு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles