‘மலையக குயில்’ என அனைவராலும் போற்றி புகழப்பட்டுவரும் இளம் பாடகி அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது கிரிக்கெட் அணிக்கு ‘அசானி’ என பெயர் சூட்டியுள்ளனர் புசல்லாவை, கலுகல்ல பகுதி இளைஞர்கள்.
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் ‘கலுகல்ல பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.
இதில் ‘கோபி’ விளையாட்டு கழகத்தின் சார்பிலும் அணியொன்று களமிறங்கியுள்ளது. அவ்வணியே, மலையக மண்ணுக்கு புகழ் சேர்த்துள்ள அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது அணிக்கு அசானி என பெயர் சூட்டியுள்ளது. ‘ரீசெட்’டுகளிலும் அசானியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக விமல் பதவி வகிக்கின்றார்.
‘கலுகல்ல பிரீமியர் லீக்’ கில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.




