அஞ்சல் வாக்கு சீட்டை படமெடுத்தவர் கைது!

மொனராகலை,  தனமல்விலை இ.போ.ச. டிப்போ செயலகத்தில் அஞ்சல் வாக்கினை செலுத்திய நபரையும், அஞ்சல் வாக்குச் சீட்டையும் தொலைபேசிமூலம்  படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தனமல்விலை இ.போ.ச. டிப்போ பணியகத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த தேர்தல் உத்தியோகத்தர்கள், கடமையிலிருந்த பொலிஸாரின் உதவியுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதுடன், படம் எடுக்கக் கூடாதென்று தமக்குத் தெரியாதென்றும், தனக்கு மன்னிப்பு வழங்கும்படியும் வினயமாக கேட்டுக் கொண்டதற்கமைய, எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், குறிப்பிட்ட புகைப் படங்களை கையடக்கத் தொலைபேசியிலிருந்து அகற்றப்பட்டது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles