அடங்க மறுக்கும் புடின்! அணுவாயுத படைக்கும் உத்தரவு!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று அமெரிக்கா கண்டித்திருக்கிறது.

புடின் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில் பேசுகையில் ரஷ் யாவின் அணு ஆயுதத் தடுப்பை இயக்
கும் படைகளை (forces operating Russia’s nuclear deterrent) முழு உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.அவ ரது இந்த அறிவிப்பு உலகெங்கும் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப் படும் நிலை தோன்றினால் அதிலிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்கே இந்த உஷார் உத்தரவு என்று ரஷ்யத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் நேட்டோ படைகள் தங்கள் போராயுதங்களைத் தொடர்ந்து குவித்து வருவதற்கும் ரஷ்யாவை சர்வதேச “ஸ்விஃப்ட்” வங்கி வலையமைப்பில் இருந்து ஒதுக்க மேற்கு நாடுகள் எடுத்துள்ள முடிவுக்கும் எதிர்வினையாற்றும் நோக்குடனேயே புடின் இந்த உத்தர வை விடுத்துள்ளார் என நம்பப்படுகிறது.

புடினின் அறிவிப்பு வெறுமனே ஓர் அரசியல் உத்தியே அன்றி அதில் அச்சப்பட எதுவும் கிடையாது என்றும், இல்லை, அவர் தனது மனநிலையை இழந்துவருகிறார் என்பதன் அறிகுறி
இது என்பதால் உலகத்தின் பாதுகாப்பு ஒரு புதிய வழமைக்குள்(new normal for our safety) வந்துள்ளது என்றும் வெவ் வேறு விதமான அவதானிப்புகளை போரியல் வல்லுநர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளி நாடா கிய பெலாரஸில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிறுத்துவதற்கான அங்
கீகாரத்தை அங்கு இன்று நடைபெறு கின்ற ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பின்முடிவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எதிர்பார்த்தது போல 72 மணி நேரப் படை நடவடிக்கைகளில் ரஷ்யாவால் உக்ரைனை நிலைகுலையச் செய்ய முடியாமற் போயிருப்பதால் அது தனது தாக்குதல் உத்திகளை மாற்றி விசாலப்படுத்தியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய ஹார்கீவ் நகரத்தி னுள் ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

நகரம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதிப்
படுத்தும் தகவல் எதுவும் இதுவரைவெளிவரவில்லை.

இதற்கிடையில், இரு தரப்புகளும் திங் கட்கிழமை உக்ரைன் – பெலாரஸ் எல்லை பகுதியில் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கி உள்ளன. பேச்சுக்களுக்குத் தயார் ஆனால் பெலாரஸ் நாட்டில் வந்து பேச நாங்கள் தயாரில்லை என்று ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்திருந்தது அதனையடுத்தே இரு நாட்டு எல்லையோ ரம், ரஷ்யப் படைகளது கட்டுப்பாட்டில் இருக்கின்ற செர்னோபில் பகுதியில் சந்திப்பை நடத்த ஏற்பாடாகிவருகிறது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles