அடாவடியில் ஈடுபட்ட சனத் நிஷாந்தவின் அண்ணன் கைது!

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் வைத்து அண்மையில் இவர் ஒருவரை கடுமையாக தாக்கினார். பொலிஸாரின் கடமைக்கும் இடையூறு விளைவித்தார். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles