அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் – பசறையில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி பசறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமே இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.

சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles