எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றிரவு 7 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிரணி தலைவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை தோற்கடிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.