அடுத்து என்ன? குழம்பிபோயுள்ள மொட்டு கட்சி எம்.பிக்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ள நிலையில், அக்கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலர், அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முடிவெடுப்பதில் குழப்பி போயுள்ளனராம்.

டலஸ் தலைமையில் அணியொன்று வெளியேறிவிட்டது. பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க என ரணில் விக்கிரமசிங்க பக்கம் மற்றுமொரு அணி நிற்கின்றது. ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக ஒரு அணி செயற்பட்டுவருகின்றது.

இந்நிலையில் எதிரணிக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வதென்று மொட்டு கட்சிக்குள் உள்ளக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என மொட்டு கட்சிக்குள் ஒரு அணி எடுத்துரைத்துள்ளது.

இதைவிடவும் பஸிலை நாடாளுமன்றம் அழைத்துவந்து அவரை எதிர்க்கட்சி தலைவராக்குவது நல்லது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வதெனில் பஸில் இரட்டை குடியுரிமையை துறக்க வேண்டும். தேசிய பட்டியலை விட்டுக்கொடுக்க ஜயந்த கெட்டகொட தயார் என ஒரு எம்.பி. தெரிவித்தாராம்.

அதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரை ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதுதான் நல்லது என்ற ஆலோசனையும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசல் புரசலாக கதை அடிபடுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles