அடுத்து என்ன? ஜனாதிபதி – பஸில் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்றக்குழுவை பஸில் ராஜபக்ச நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். மஹிந்த ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். மேலும் சிலர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன் மே தினக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதியை, மொட்டு கட்சி ஸ்தாபகர் இன்று சந்திக்கவுள்ளார்.

தெற்கு அரசியலில் அடுத்து என்ன என்ற சர்ச்சைக்கு இச்சந்திப்பில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles