குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை தனது வீட்டில் இருந்தபடியே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்க்கு சமர்ப்பிக்க முடியும்.
கைரேகை போன்ற பயோமெட்ரிக் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே விண்ணப்பதாரர் திணைக்களத்திற்க்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக கவுன்டர்களை நிறுவ திணைக்களம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலக அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.










