அடுத்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு – மொட்டு கட்சி எம்.பி. அதிரடி அறிவிப்பு!

” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிட வேண்டும். அவருக்கு நான் நிச்சயம் ஆதரவு வழங்குவேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியம். அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். நாம் ஜனாதிபதி பக்கம் நிற்போம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் மோதல் இல்லை. தற்போதைய ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் வாக்களித்தனர்.

நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடியும் என்ற நம்பிக்கையிலேயே 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு வழங்கினர்.

நான் முக்கிய பதவியை வகிப்பலாம். நெருக்கடி நிலைமை என்ன என்பது புரியும். எனவே, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வரவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles