ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய சம்மேளன கூட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகே தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது எமக்கு நம்பிக்கை உள்ளது, அவர் எம்முடன் பயணிப்பார் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை கட்சி எடுத்தால் சிறப்பாக இருக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
		