அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என்று அக்கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது சம்மேளனம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கடந்த கால தேர்தல்களில் எமது கட்சியே வெற்றிபெற்றது. அடுத்த தேர்தலிலும் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.