அடுத்த தேர்தலில் வெற்றிநடை போடுவதற்கான ஆரம்பபுள்ளி எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வைக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட சம்மேளனம் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சம்மேளனத்தில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச, கட்சி முக்கியஸ்தர்களிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு வெற்றி நோக்கி பயணிக்க மொட்டு அணியினர் ஒன்றுபட வேண்டும் எனவும் மஹிந்த அறைகூவல் விடுத்துள்ளார்.