அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்குவர் – அநுர எச்சரிக்கை

“அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர் தலை நடத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெற்ற
புலம் பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக்கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தோல்விப் பயம் காரணமாக உள்ளாட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் களை அரசு ஒத்திவைத்துள்ளது.

உள்ளாட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும்.

எனினும், மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டும். எனவே, ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம்திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.

மக்கள் இவ்வளவு கஷ்டங்களைஅனுபவித்தாலும் ஏன் வீதிக்கு வருவதில்லை எனச் சிலர் கேட்கின்றனர்.

மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால் மக்கள் வீதியில் இறங்குவார்கள்.

அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை மாற்றியமைப்பதற்கான அனைத்து சக்திகளையும் தேசிய மக்கள் சக்தி அரவணைக்கும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles