அணுவாயுத குறைப்பு உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகக் கூடாது

மூலோபாய அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்துவிலகிக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருப்பது பொறுப்பற்ற முடிவு என்று வர்ணித்திருக்கும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தனி பிளிங்கன், இந்த உடன்படிக்கையை ரஷ்யா அமுலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

அணுவாயுதங்களைக் குறைக்க உதவும் இம் முக்கிய உடன்படிக்கை 2010ம் ஆண்டு புதிதாக இரு நாடுகளுக்கும் இடையேசெய்து கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கை 2026 வரை நடைமுறையில் இருக்கும். ஆனால் கடந்தமாதம் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்துதாம் விலகிக் கொள்வதாகஅறிவித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

டில்லியில் ஜி20 வெளிவிவகாரஅமைச்சர் கலந்துகொண்ட மாநாட்டில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ரஷ் வெளியுறவுஅமைச்சர் சேர்ஜி லவ்ரோவை சந்தித்துபேசினார். உக்ரேன் யுத்தத்தின் பின்னர் இரு தரப்பினரும் சந்திப்பது இதுவேமுதல் தடவையாகும்.

ரஷ்யவெளியுறவுஅமைச்சரைசந்தித்தபோதுபொறுப்பற்ற இத் தீர்மானத்தைமாற்றிக் கொண்டு இரு நாடுகளுக்கும் பலன் தரக் கூடிய உடன்படிக்கையில் தொடரும்படியும், இரு பிரதான அணுவாயுத நாடுகளை ரஷ்யாவிடமும் அமெரிக்காவிடமிருந்தும் உலக மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் கூறியதாக பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

நம்மிருநாடுகளுக்கு இடையேஎத்தகையபிரச்சினையும் உறவு சீர்கேடும் இருந்து விட்டுப் போகட்டும். நாம் இப்போது இந்த உடன்படிக்கைக்கு திரும்பவேண்டும். ஏனெனில் பனிப்போர் நிகழ்ந்த காலத்திலும் கூட இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது என்றும் பிளிங்கன் சேர்ஜியிடம் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles