அண்ணாத்த சம்பளத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டாரா ரஜினி?

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் பற்றி கடந்த சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக சிவா இயக்கும் படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் அண்ணன் தங்கை பாசம் பற்றிய சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த படத்திற்கு அண்ணாத்த என சிவா பெயரிட்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சென்ற வருடம் துவங்கிய அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அந்த நேரத்தில் கொரோனா பிரச்சனை வெடித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை ஷூட்டிங் மீண்டும் நடத்த முடியாமல் படக்குழு இருக்கிறது.

முதலில் இந்த வருடம் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் கடந்த மே மாதம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அண்ணாத்த படம் 2021 பொங்கல் பண்டிகைக்காக ரிலீஸாகும் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது நான்கு மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாலும், மேலும் மீண்டும் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில் இருப்பதாலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அண்ணாத்த வெளியாவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பிரச்சனைக்கு நடுவில் மீண்டும் ஷூட்டிங் நடத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று ரஜினி கருதுகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் வதந்தி என்னவென்றால் அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ரஜினி திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது தான். மேலும் படப்பிடிப்பு நடத்த பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது என்று கூட செய்திகள் பரவி வருகிறது. கொரோனா காரணமாக அதிக அளவு நஷ்டம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் சம்பளத்தை குறைக்கும்படி ரஜினியிடம் தயாரிப்பு நிறுவனம் கேட்டதாக கூறப்படுகிறது, அதற்கு பிறகு தான் தான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் என செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் தயாரிப்பாளர் சம்பளத்தை குறைக்க கேட்கவே இல்லை என்றும் மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் நின்ற பிறகு தான் நடக்கும் எனத் தெரிகிறது. வழக்கமாகவே ரஜினி படங்களுக்கு இப்படி வதந்திகள் வருவது புதிதல்ல என்று கூட சிலர் சொல்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது இது தான் முதல் முறை அவர் இதற்கு முன்பு இது பற்றி உருக்கமாக ஒரு பேட்டியில் பேசி இருந்தார். கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கும் படங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles