அதிபர்,ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை சங்கடத்தில் ஆழ்த்துவது பொருத்தமற்ற செயலாகும். – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஹப்புதலை பகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் . அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது. அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும். இதில் மாற்று கருத்து கிடையாது. ஆனாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமை குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளத்தை அதிகரித்திருக்கின்றோம். இந்நிலையில் மீண்டும் அதிபர் ஆசியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமானால் பொருளாதாரம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி திறைசேரி வழங்ககூடிய இடத்தில் இருக்கவேண்டும்.” – என்றார்.
எஸ்.சதீஸ்