அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரியா நாட்டு பிரஜையொருவர் பலியாகியுள்ளார்.
37 வயதுடைய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே கடவத்தை மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது . சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
