அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார். உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டில் சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்கு பாரிய நெல் ஆலைகள் பதுக்கி வைத்திருப்பதே காரணம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles