இனியும் மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுவதாகவும், இதன் மூலம் அவர்கள் மேடைகளில் சொல்லும் விடயங்களின் உண்மைத் தன்மைமையை முழு நாட்டு மக்களும் கண்டுகொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி விசேட சம்மேளன கூட்டத்தில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் கூறினார்.










