அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 24ஆவது சிரார்த்த தினம் இன்று

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24ஆவது சிரார்த்த தினமான இன்றாகும் (30.10.2023) .

இதனை முன்னிட்டு பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

Related Articles

Latest Articles