அமெரிக்காவில் வைத்தியராக பணியாற்றும் வைத்தியர் ரிகாஷா சவாஹிர் விடுமுறையை கழிப்பதற்காக அவரது கணவருடன் இலங்கை வந்துள்ளார்.
அவர் பதுளை, ஹப்புத்தளையில் இருக்கும் கெல்பெர்ன் மவுண்டன் வியூ பங்களாவில் இரு தினங்கள் தங்கினார்.
அதன்போது, வீரகேசரி ஸ்தாபனத்தின் ஆலோசகரும், கெல்பெர்ன் தோட்டத்து முன்னாள் முகாமையாளரான கனகரட்னத்தின் வேண்டுகோளின்படி ஒரு வைத்திய முகாமை நடத்தி, கெல்பெர்ன் 50 ஏக்கர் தோட்ட தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் கெல்பெர்ன் மவுண்டன் வியூ ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.
அத்துடன், அத்தோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவர்களது எதிர்கால கனவு என்ன அந்த கனவை நனவாக்க அவர்கள் மேட்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்ன என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை போட்டி நடத்தி அதில் பங்கேற்றவர்களுக்கு பண பரிசுகளை வழங்கி அம்மாணவர்களுக்கு அவர்களது எதிர்கால வளர்ச்சி பற்றி சிந்திக்க தூண்டினார்.
நன்றி – வீரசேகரி