சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் படங்களில் ஒன்று ‘படையப்பா’. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
மேலும், சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் இல்லை, அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
ரஜினிகாந்துக்கு இந்தியாவில் மட்டுமில்லை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழ்நாடாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஜினிகாந்தின் மீதான ரசிகர்களின் அன்பு எப்போதும் அதிகமாகவே இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கிளாசிக் படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் வெறித்தனமாக குவிந்தனர். ‘படையப்பா’ படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.