இலங்கைக்கு பயணத்தடை எதுவும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெளிவுபடுத்தியுள்ளார்.
அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகள் அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அறுகம்பை பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில் அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம்.
அதற்கு அவர்கள் விரைவாக பதிலளித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.
எவ்வாறெனினும் இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
