” சர்வக்கட்சி அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்த்து, நாட்டை மீட்பதற்கான வியூகமாகவே சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும்,
எனினும், 22 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக – தேசிய அரசு என்ற போர்வையில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எமக்கு பதவிகள் அவசியமில்லை, குறுகிய அமைச்சரவை இருந்தால் போதும், பிரதி அமைச்சுகள் தேவையில்லை.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.