” அமைச்சு பதவிகள் இல்லாவிட்டாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணம் தொடரும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தொடர்ச்சியாக இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவரே முடிவெடுப்பார். அமைச்சு பதவிகளுக்காக அலையும் கட்சி எமது கட்சி கிடையாது.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
