” முற்போக்கு சிந்தனை இல்லாத இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிப்பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை எனவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகூட கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.