‘அரசாங்கத்திலிருந்து விமல் வெளியேற வேண்டும்’ – இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து

விமல் வீரவன்சவை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான நிமல் லான்சா வலியுறுத்தியுள்ளார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு விமல் வீரவன்சவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது. அவர் அவரின் கட்சி விவகாரத்தை பார்த்துக்கொள்ளட்டும். எமது பிரச்சினைகளை நாம் பார்க்கின்றோம்.

அரசாங்கத்தில் இருந்தால் கூட்டு பொறுப்பு இருக்கவேண்டும். அதனைவிடுத்து வீண் பிரசாரங்களை செய்வதனை ஏற்கமுடியாது. அவ்வாறு செய்வதாக இருந்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, எதிரணியில் அமர்ந்து அவர் அதனை செய்யட்டும். விமல் வீரவன்ச என்ற நபரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.” – எனவும் நிமல் லான்சா குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அப்பதவி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என விமல்வீரவன்ஸ தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையைக்கிளப்பிவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles