அரசாங்கத்துக்குள் பூகம்பம் வெடிக்குமாம் – விமல் ஆருடம்

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் பூகம்பம் வெடிக்கும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இடம்பெறும் தவறை அன்று நானும், கம்மன்பிலவும் சுட்டிக்காட்டியபோது அமைச்சரவையில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம். அதுபோலவே ரொஷான் ரணசிங்கவும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார்.

அரசின் வீழ்ச்சி பயணம் ஆரம்பித்துவிட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. இது இத்துடன் நின்றுவிடாது, ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் மேலும் மோதல் வலுத்திருக்கும்.

ரொஷான் ரணசிங்க, ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தொடர்பிலேயே விமர்சனம் முன்வைத்தார். இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதன்மூலம், ஜனாதிபதியும், அரசும் கிரிக்கெட் சபை பக்கமே நிற்கின்றது என்பது உறுதியாகின்றது. ” – என்றார்.

Related Articles

Latest Articles