‘அரசியல் நியமன ஆளுநர்களாலேயே மாகாணசபை முறைமை தோல்வி”

” இலங்கையில் மாகாணசபை முறைமை தோல்வி அடைந்த முறைமையாக இருப்பதற்கு அரசியல் அடிப்படையிலான ஆளுநர் நியமனமும் பிரதான காரணமாகும்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாண சபைகளில் உள்ள பிரதான பிரச்சினைகளில், யாரை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிப்பதற்கு இருக்கும் அதிகாரம் என்பது பிரதான பிரச்சினையென்பது எனது கருத்து. அத்துடன், ஆளுநர்கள் தமக்கு தேவையான வகையில் செயற்பட முற்படுகின்றமையும் அடுத்த பிரச்சினையாகும்.

அரசியல்வாதிகளே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர். அதுவும் தோல்வி அடைந்த அரசியல்வாதிகள், மாகாணசபை முறைமை பலவீனமான – தோல்வி அடைந்த முறைமையாக இருப்பதற்கான காரணிகளுள் இதுவும் ஒன்றாகும்.

மத்திய அரசுக்கு தேவையான விதத்தில் ஆளுநர்கள் செயற்படும் நிலைமை காணப்படுகின்றது. இதனால்தான் மாகாணசபை முறைமைமீதான நம்பிக்கை இல்லாமல்போனது. .” – என்றார்.

Related Articles

Latest Articles