“ அரசு தவறான வழியில் பயணிக்கும்பட்சத்தில் அரசில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளியேறும்.” – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பை நாம் கண்டித்துள்ளோம். அந்த அறிவிப்புக்கும், எமது கட்சிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறுதான் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
ஐ.தே.க. பொதுச்செயலாளரின் அறிவிப்பு தொடர்பில் தனக்கு உடன்பாடு இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி கட்சி தலைவர் என்ற வகையில் தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போதைய அரசு தவறான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது. அரசில் இருந்துகூட வெளியேறுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.