பிலிப்பைன்ஸ் மேயர் அரிஸ்டோட்டில் அகுயர் வித்தியாசமான கொள்கையை அறிமுகம் செய்துள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் புன்னகைக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்கிறார் அவர். உள்ளூர் அரசாங்கத்தின் சேவைத்தரத்தை மேம்படுத்துவது அந்தப் ‘புன்னகைக் கொள்கையின் நோக்கம் என்று அவர் கூறினார்.
மக்களுக்குச் சேவையாற்றும்போது நேர்மையைப் பிரதிபலிக்கவும் நிதானமான, தோழமையான சூழலை உருவாக்கவும் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அகுயர் இம்மாதம் தான் குவேஸான் மாநிலத்தில் உள்ள முலானே என்ற ஊரின் மேயராகப் பொறுப்பேற்றார்.
அரசாங்க ஊழியர்களிடம் உதவி கேட்கும்போது அல்லது வரி செலுத்தச் செல்லும்போது தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்து உள்ளூர்வாசிகள் புகார் செய்ததாக அவர் கூறினார்.
அதனால் ஊழியர்களின் நடத்தையை மாற்ற விரும்புகிறார் அகுயர்.
புன்னகைக் கொள்கையை மீறும் ஊழியர்களுக்கு அவர்களின் 6 மாதச் சம்பளத்திற்கு ஈடான அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படலாம்.