” தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.” – என்று பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள் உட்பட மாதாந்தம் அரசாங்க கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

