அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பரில் விசேட விடுமுறைகள்

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் பரவல் காரணமாகப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், நாட்டில் கொவிட் பரவல் குறைவடைந்து வந்த நிலையில் தற்போது பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு, கல்வி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles