பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாருக்கு மலையக மக்கள் முன்னணி வழங்கியிருந்த கால கெடு நாளையுடன் (13.11.2020) நிறைவடைகின்றது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அரசாங்கத்திற்கு ஆதரவாக 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களித்தமை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி அவரிடம் விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு செயற்குழு கூடி இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததை அடுத்து இந்த கூட்டத்தில் ஏகமனதாக அவரிடம் கடிதம் மூலம் விளக்கம் கோறுவது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு 14 வேலை நாட்கள் அடங்கிய நாட்களில் அவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவருக்கு இது தொடர்பாக கடிதம் மூலம் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ் விஜேசந்திரன் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்து குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இருபதாவது திருத்தச் சட்டமூலத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் கருத்துக்கு மாறாக வாக்களித்தமை தொடர்பாக விளக்கம் தருமாறு கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் காலக்கெடு நாளையுடன் (13.11.2020) நிறைவடைகிறது. இது தொடர்பாக அவர் தனது விளக்க கடிதத்தை மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் வாரத்தில் அதற்கான பதிலை அவர் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பார் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ் விஜயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடிதம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி தீர்மானம் எடுப்பார்கள் எனவும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் திரு விஐயசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அரவிந்தகுமாரின் விளக்கம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.