உள்ளாட்சிமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரவிந்தகுமார் தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்பன கூட்டணியாக தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் அறிவித்திருந்தார்.
எனினும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள், அரவிந்தகுமார் தரப்புக்கு எதிராக எதிர்ப்பு வலுத்ததால் கூட்டணி அமைக்க பிரபா கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.
