அறகலய குறித்து அடுத்த ஆட்சியில் விசாரணை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன், அறகலயவின் பின்னணி தொடர்பில் அடுத்த எமது ஆட்சியின்போது முறையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் மீண்டுமொருமுறை அவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை மொட்டு கட்சியே வெற்றிகொள்ளும் எனவும் உரிய நேரத்தில் வேட்பாளர் பெயரிடப்படுவார் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles