பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அறிமுக பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரமவின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்றது.
2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பரவீன் ஜயவிக்ரமவின் பந்து வீச்சே பங்களாதேஷ் வீரர்களுக்கு கடிவாளமாக அமைந்தது.
அதேவேளை, ப்ரவீன் ஜயவிக்ரம, அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பிரதியை கைப்பற்றிய 6வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனைப்பட்டியலில் இணைந்துக்கொண்டார். அறிமுக போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சாளர் ஒருவர் வெளிப்படுத்திய சிறந்த திறமை இதுவாகும்.
தங்களுடைய 2வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 259 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.