அற்ப அரசியலுக்காக தமிழ் மக்களை பிரித்தாளும் அரசியல் வியாபாரிகள்!

” அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசி தேசிய மக்கள் சக்தியையும், தமிழ் பேசும் மக்களையும் பிரிக்க முற்படும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், எப்படியான அரசியல் சூழ்ச்சிகள் வகுக்கப்பட்டாலும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்தியை கைவிட்டு செல்வதற்கு தமிழ் பேசும் மக்கள் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

” உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாக அரசியல் களத்தில் எதிரணிகள் ஒப்பாரி வைக்கின்றன. உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவை, பொதுத்தேர்தல் முடிவுடன் முடிச்சி போடுகின்றன. கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலுடன் ஒப்பிட்டுபார்த்தால் நிலைமை புரியும்.

அதேபோல தேசிய மக்கள் சக்தி 266 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. வடக்கிலும் 150 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். எனவே, பின்னடைவு, வீழ்ச்சி எனக் கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய். மக்கள் ஆதரவு எமக்கு என்றும் உள்ளது. ஏனெனில் நாம் மக்கள் அரசியலை முன்னெடுப்பவர்கள்.

உண்மையான நல்லிணக்கம்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது. அதற்கு மக்களும் துணை நிற்கின்றனர். எனினும், இனவாதம் பேசி, மக்களை பிரித்தாளும் அரசியலை சிலர் முன்னெடுக்க முற்படுகின்றனர். அப்படியானவர்களுக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles