அல்லக்கைகளே அராஜகத்தில் ஈடுபடுகின்றன

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வளவாச்சும் பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘நாட்டை சீரழிக்கும் சட்டங்களை தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மொட்டுக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை சீரழிக்கும் சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இன்று (28) காலை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘மகின் ரடட’ எனும் அமைப்பின் உறுப்பினர்களான சஞ்சய் மஹவத்த, காமந்த துஷார, அஜந்தா பெரேரா உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் சிலவற்றின் உறுப்பினர்களே ‘நாட்டை சீரழிக்கும் சட்டங்களை தோற்கடிப்போம்’ எனும் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தவர்களாவர்.

இதன்போது, ​​ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவும் கட்சி அலுவலகத்தில் இருந்தார்.

கட்சி அலுவலகத்துக்குள் அமைச்சர் நுழையும் போது, அந்த இடத்தில் போராட்டம் எதுவும் இல்லை.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்சி காரியாலயத்தில் வேலையை முடித்துக்கொண்டு வெளியில் வந்த போது, ​​அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதால் அந்த வீதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு அமைச்சரிடம் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் தனக்கு ஒரு பிரச்சினையல்ல, எனவே தானும் அந்த வழியாகவே செல்வதாக அமைச்சர் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிவிடும் வரை அமைச்சர் அதே இடத்தில் இருக்க வேண்டியதாயிற்று. அப்போது, ​​அந்த இடத்தில் இருந்த செய்தியாளர்கள் அமைச்சரின் அருகில் வந்து, அமைச்சரிடம் நடந்த பரபரப்பு குறித்து கேட்டனர்.

அமைச்சரின் பதில்கள் வருமாறு:

கேள்வி – அரசாங்கத்தின் பலமானவர் என்ற வகையில் நீங்கள் போராட்டக்காரர்களுக்கு என்ன செய்தி கூற விரும்புகிறீர்கள்?

பதில் – இந்த நாட்டை அழிக்க முயலுவது ஒருகுழு. அந்தக் குழு எந்தளவாவது பணம் தேட முயற்சிக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு உரிமை உண்டு. நாட்டில் ஜனநாயகம் உள்ளது.

கேள்வி – இவைகளுக்கு அரசாங்கம் வளைந்து கொடுக்குமா?

பதில் – ஐந்தாறு பேர் கூச்சலிடுகிறார்கள். இந்த அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதே நாட்டில் உள்ள பெரும்பான்மையான கருத்தாகும். கூச்சலிடுபவர் ஒராளாவது மொட்டுக்கு வாக்களிக்க இருக்கிறார்களா? அவர்கள் ஒருவருக்கொருவர அல்லக்கைகளாக வேலை செய்கிறார்கள். கூச்சலிடும் உரிமை இருக்கிறதுதானே.

கேள்வி – யாருடைய அல்லக்கைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் – யாருடைய அல்லக்கைகள் என்றாலும் இங்கு வருபவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. ஊடக நிறுவனங்களுக்கு தெரியாதா?

கேள்வி – மொட்டுக் கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில் – நாங்கள் எமது அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை.

கேள்வி – தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளராக வருவாரா?

பதில் – என்னால் சொல்ல முடியாது, இன்னும் காலம் இருக்கிறது. அறிவிப்பு வந்த பிறகு பேசலாம்.

கேள்வி – மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தாமதமாக வருவதாக நீங்கள் நினைக்கவில்லையா?

பதில் – கோத்தபாய அவர்களை அழைத்து வந்து 45 நாட்களில் ஜனாதிபதியாக்கினோம். அமைப்பு பலம் இருந்தால் ஒரு மாதத்தில் செய்து விடலாம்.

கேள்வி – அருகில் கொண்டு வந்தால் பிரச்சனை வராதா? கோத்தபாய அவர்களுக்கும் அதுதான் நடந்தது.

பதில் – அரசியல் அனுபவம் உள்ளவருக்கும் அரசியல் அனுபவம் இல்லாதவருக்கும் வித்தியாசம் உள்ளது. அவ்வளவுதான்.

கேள்வி -ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து முன்னோக்கிச் செல்வோம் என்று மொட்டுக் கட்சியில் இன்னும் தீர்மானம் உள்ளதா?

பதில் – இல்லை, அப்படி இல்லை. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அதைப் பற்றி கூற முடியும்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரின் வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது அமைச்சரின் பயணத்துக்கு இடையூறாக வாகனத்தின் கதவை திறக்க போராட்டக்காரர்கள் முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு இரண்டு தேங்காய்களை தரையில் வீசினர்.

Related Articles

Latest Articles