அவசரகால சட்டம் நீக்கம் – உரிமை கோருகிறது சுதந்திரக்கட்சி

” அவசரகால தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளமையானது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினோம். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசுடன் இருப்பதையே அவர் விரும்புகின்றார். ஆனால் எமக்கு ஏற்பட்டுள்ள நிலை மற்றும் மக்களின் நிலைப்பாட்டை நாம் தெளிவுபடுத்தினோம்.

அத்துடன், அவசரகால சட்டத்தை நீக்குமாறும் கோரினோம். அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை எமக்கு கிடைத்த வெற்றியாகும். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவோம். சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள ஏனைய இரு அணிகளையும் கைவிடமாட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles