அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

Related Articles

Latest Articles